பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொடுதிரைகளின் மூலம் தட்டச்சு செய்தல் சாத்தியமாக்கப்பட்டது.
இவற்றின் வரிசையில் தற்போது ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அதிவிசேட தொழில்நுட்பத்தினைக் கொண்ட கையுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வயர்லெஸ் தொழல்நுட்பத்தினால் செயற்படக்கூடியதாகக் காணப்படும் இக்கையுறைகளின் விரல் பகுதியில் காணப்படும் எழுத்துக்களை பெருவிரல் கொண்டு அழுத்தினால் போதும் குறிப்பிட்ட எழுத்து கைப்பேசியில் பதிவுசெய்யப்பட்டுவிடும்.
ஏனைய முறைகளில் பிரயாணங்களின் போது கைப்பேசிகளில் தட்டச்சு செய்வது மிகவும் கடினமான காரியமாக திகழ்வதனால் இக்கையுறைகள் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.