திங்கள், 22 அக்டோபர், 2012

நமது மூதாதையர்கள் அதாவது முதல் மனிதன் குரங்கு போல இல்லாமல், அணில் போன்று இருந்ததாக புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புர்கடோரியஸ் என்ற பாசில் மூலம் இது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாசிலில் உள்ள உருவம் தான் உலகின் மிகப் பழமையான, மிகவும் ஆரம்ப கால மனித உயிரின் முதல் படி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த உருவம் அணிலைப் போல இருப்பதாகவும், இதுதான் மனிதனின் ஆரம்ப கால உருவமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஆரம்ப கால மனித உருவமானது பெரும்பாலும் மரங்களிலேயே வசித்து வந்ததாகவும், பழங்களைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், இதற்கு முன்பு புர்கடோரியஸின் பல் மட்டுமே சிக்கியிருந்தது. தற்போதுதான் அதன் எலும்புக் கூட சிக்கியுள்ளது.

இந்த அணில் வகை உயிரினமானது தனது கால்களை எல்லாப் பக்கமும் திருப்பும் வகையில் இருந்துள்ளது.

மேலும் அதன் கால் எலும்பு மூட்டுகளும் மனிதர்களுக்கு இருப்பதை போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த அணில் போன்ற உயிரினம் தான் பின்னாளில் மனித உருவமாக மாறியிருக்கலாம் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts