Desktop நாமே வடிவமைத்துக்கொள்ள மென்பொருள் 

மைக்ரோசொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Xbox Music சேவை அறிமுகமாக உள்ளது.

Windows சாதனங்கள், Smart Phone மற்றும் Tabletகள் போன்றவற்றில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இச்சேவையின் மூலம் சுமார் 30 மில்லியன் வரையிலான பாடல்களை கேட்டு மகிழ முடியும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சேவையினை Windows 8 இயங்குதளத்தில் செயற்படும் சாதனங்களில் முற்றிலும் இலவசமாக பெற்றுக் கொள்ள முடிவதுடன், ஏனையவர்களுக்கு இதில் குறிப்பிட்ட அளவான சேவைகளை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளது.

எனினும் மாதாந்தம் 9.99 அமெரிக்க டொலர்களை செலுத்தி ஏனையவர்களும் இச்சேவையினை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





வீடியோ கேம் பிரியர்களை கருத்தில் கொண்டு Archos நிறுவனமானது தமது தயாரிப்பில் உருவான GamePad 7 முதலாவது Gaming Tablet இளை அறிமுகப்படுத்துகின்றது.

இச்சாதனமானது கூகுளின் உருவாக்கத்தில் வெளியான Android 4.1 Gelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டுள்ளதுடன் 7 அங்குல அளவு கொண்ட தொடுதிரையினையும் கொண்டுள்ளது.

மேலும் இதன் 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual- Core Processor-ஆனது quad-core Mali 400 MP Graphic Processor-ன் உதவியுடன் துல்லியமான காட்சிகளை உருவாக்கும் திறன் கொண்டதாகக் காணப்படுகின்றது.

தொடுதிரை வசதி காணப்பட்ட போதிலும் மேலதிக கட்டுப்பாட்டிற்காக Buttons-களை கொண்டுள்ள இச்சாதனத்தின் பெறுமதியானது 149 அமெரிக்க டொலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts