நிலாவில் காய்கறித் தோட்டம் உருவாக்கப் போகிறதாம் சீனாa
நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஆய்வுகள் நடத்திவருகின்றன
இதற்கிடையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு அங்கேயே உணவுக்கு புத்தம் புதிய காய்கறிகள் கிடைக்கும் வகையில் தோட்டம் அமைக்க முடியுமா? என்ற முயற்சியில் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தீவிரமாக ஈடுபட்டது.
இதற்காக பெரிய பரிசோதனை கூண்டு அமைத்து ஆய்வு நடத்தினார்கள். இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்துள்ளார்.
“டைனமிங் பேலன்ஸ்டு மெக்கானிஷம்” என்பதை பயன்படுத்தி ஆகாய வெளியில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை கொடுக்க முடியும் என்ற நிலை உருவாகப் போகிறது.