இன்றைய நவீன உலகில் மின்னஞ்சல் தொடர்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஊடகமாக காணப்படுகின்றது.
இதன் பயன் கருதி பல்வேறு நிறுவனங்கள் இந்த மின்னஞ்சல் சேவையினை வழங்கி வருகின்றன.
எனினும் இச்சேவைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் எனின் குறிப்பிட்ட வயதெல்லையை கடந்திருக்க வேண்டிய அவசியம் காணப்படுவதுடன் குழந்தைகள் எவரும் பயன்படுத்தப்பட முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
இப்பிரச்சினைக்கு தீர்வாக தற்போது Maily எனும் குழந்தைகளுக்கான மின்னஞ்சல் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கென Tom Galle மற்றும் Raphael Halberthal ஆகியோரால் உருவாக்கப்பட்டுள்ள விசேட அப்பிளிக்கேஷனை iOS சாதனங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.