சமூக வலைத்தளங்களின் மத்தியில் அசைக்க முடியாத அரசனாகத்திகழும் பேஸ்புக் தளமானது தற்போது மேலும் ஒரு புதிய வசதியை தனது பயனர்களுக்கென அறிமுகம் செய்துள்ளது.
News Feed எனப்படும் இவ்வசதி மூலம் நண்பர்கள் விபரம், புகைப்படங்கள், பாடல்கள், பின்தொடர்பவர்கள் தொடர்பான
விபரங்களை தேவைக்கு ஏற்றவாறு கட்டுப்படுத்தி (Filter) கையாள முடியும்.
இவ்வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு உங்கள் பேஸ்புக் கணக்கினை பயன்படுத்தி உள்நுழைந்து Facebook News Feed எனும் இணைப்பினை கிளிக் செய்க.
அதன் பின் தோன்றும் விண்டோவில் Join Now (You're on the list!) எனும் பொத்தானை அழுத்தவும். இப்போது நீங்கள் காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பீர்கள். சில நாட்களின் பின்னர் குறித்த வசதியை நீங்கள் பெற்றுக்கொள ளலாம்.