ஞாயிறு, 28 அக்டோபர், 2012

புதிய அம்சங்களுடன் வெளியாகியுள்ள விண்டோஸ் 8 இயங்குதளத்தினை உங்கள் கணனியில் முன்னைய விண்டோஸ் பதிப்புக்களிலிருந்து Upgrade செய்து கொள்ள முடியும்.

விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கு Upgrade செய்வதற்காக அப்பதிப்பினை கொள்வனவு செய்வதற்கு முன்னர் Windows 8 Upgrade Assistant ( http://go.microsoft.com/fwlink/p/?LinkId=261871) எனும் மென்பொருளை தரவிறக்கம் செய்து அதனை உங்கள் கணனியில் இயக்கவும்.

இம்மென்பொருள் இயங்கி சிறிது நேரத்தில் உங்கள் கணனியானது விண்டோஸ் 8 இயங்குதளத்தினை Upgrade செய்வதற்கு பொருத்தமான வன்பொருட்பாகங்களைக் கொண்டுள்ளதா என தெரிவிக்கும்.

இச்செயன்முறையில் சாதகமான பதில் கிடைத்தபின் http://windows.microsoft.com/en-US/windows/buy தளத்திற்கு சென்று விண்டோஸ் 8 பதிப்பினை கொள்வனவு செய்யவும் அல்லது குறித்த இயங்குதளத்தினைக் கொண்ட DVD காணப்படின் அதனை பயன்படுத்தவும்.

Upgrade செயன்முறையானது Windows 7 பதிப்பிலிருந்து மேற்கொள்ளப்படுமாயின் முன்பு காணப்பட்ட மென்பொருட்கள் மற்றும் கோப்புக்கள் பாதுகாப்பாக புதிய பதிப்பிற்கு இடம்மாற்றப்படும்.

அவ்வாறில்லாது ஏனைய பதிப்புக்களிலிருந்து Upgrade செய்யின் மென்பொருட்கள் அனைத்தும் புதிதாக நிறுவவேண்டிய அவசியம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Blog Archive

Popular Posts

Featured Posts