வெள்ளி, 28 செப்டம்பர், 2012

கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது. இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும் கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கூகுள் பைபர்(Google Fiber) என்ற பெயரில், அதி வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை கூகுள் வடிவமைத்துள்ளது. 2011ஆம் ஆண்டில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டது. உலகிலேயே அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை இதன் மூலம் பெறலாம். மின்னல் வேக டேட்டா பரிமாற்றம் என்பது நிஜமாகவே இதன் மூலம் நடைபெறும். ஒரு நொடியில், ஒரு கிகா பிட் பிட்ஸ் டேட்டா பரிமாறப்படும். ஆப்டிகல் பைபர் மூலம் இது சாத்தியமாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கினை இதற்கென அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த கூகுள் சோதனை நடத்தியுள்ளது. இணையம் மட்டுமின்றி வீடியோ, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. ஆனால் தொலைபேசி சேவை இதில் சேர்க்கப்படவில்லை. தொடக்கத்தில் கேன்சாஸ் நகரத்தில் இது அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 இல்ல வளாகங்கள் முதல் சந்தாதாரர்களாக விண்ணப்பித்தன. சென்ற ஜூலையில் இவை பதியப்பட்டன. மூன்று வகைகளில் இது கிடைக்கும். 1. இலவச இன்டர்நெட். 2. 70 டொலர் செலுத்துவோருக்கு ஒரு கிகா பிட். 3. 120 டொலர் செலுத்துவோருக்கு தொலைக்காட்சி சேவை இணைந்த இன்டர்நெட். தொலைக்காட்சி இணைந்த சேவையில், ஒரு டெராபைட் அளவிலான கூகுள் ட்ரைவ் வசதி தரப்படுகிறது. அத்துடன் ஒரு டெராபைட் டி.வி.ஆர். ரெகார்டிங் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் எட்டு தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து, பின்னர் வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம். இந்த வகை சேவை பெறுவோருக்கு நெக்சஸ் 7 டேப்ளட் பிசி ஒன்று தரப்படுகிறது. இதனை ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படுத்தலாம். suryaphotology
Next
புதிய இடுகை
Previous
This is the last post.

Sample text

DOWNLOAD MY WEBSITE APP

Social Icons

Blogger templates

Ads 468x60px

Social Icons

Popular Posts

Featured Posts